நாட்டில் இன்றும்(02) மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(02) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடமாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை , மகியங்கனை பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் தெரிவித்துள்ளது.
மின்னலிலிருந்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.