நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை….

நாட்டில், குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் நாளை முதல் குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிகக்கூடும் என்று, வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

வளிமணடலவியல் திணைக்களம், இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.