ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் நெருக்கடி தீரும்

(FASTGOSSIP | COLOMBO) – நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்பட வேண்டுமானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கு உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மஹிந்தவின் கட்சியினர் வலியுறுத்தி வந்திருந்தது மாத்திரமன்றி கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.