நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து மஹேல’விடமிருந்து ட்விட்டர் பதிவு….

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து தான் பெரிதும் கவலைப்படுவதாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த ட்விட்டர் பதிவில், மேலும், 25 வருட கால போர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எமது அடுத்த தலைமுறையினருக்கு அவ்வாறானதொரு அனுபவத்தினை வழங்குவது கூடாது. அமைதியினை நிலைநாட்ட இன மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma