நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீளவும் திறப்பு..

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 5 கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று(11) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, அயகம மற்றும் அலபாத ஆகிய பிரதேச கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த குறித்த இந்த பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)