நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையானது சில நாட்களுக்கு நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய காலநிலையானது, மணிக்கு 40 முதல் 50Km வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அநேகமான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் இடிமின்னல் தாக்குதல்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.