நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி – திகன பிரதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவரது செயலாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர், கட்சி சார்ந்த மாவட்ட தொகுதி அமைப்பாளர் ஆகியோரது பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சமயங்களுக்கு இடையே முறுகல் நிலையினை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்கள் ஊடாக செய்திகளை பதிவு செய்து பரப்பியோரது விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#rishma