நாட்டில் பல பகுதிகளில் இன்றும்(19) அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சில பிரதேசங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக் கூடும் என குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேல்,சப்ரகமுவ , தென்,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 100mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதோடு,
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.
அத்துடன் வடக்கு மற்றும் தென்பகுதி கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம், மணித்தியாலயத்திற்கு 60 -70Km ஆக அதிகரிக்க கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.