நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இன்று(13) இரவு வேளைகளில் கிழக்கு, ஊவா, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலயத்திற்கு 50Km வேகத்தில் காற்று வீசக் கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.