நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக மேல் ,மத்திய சப்ரகமுவ , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களில் சுமார் 100 மில்லிலீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு , வடமேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமாக நிலவக்கூடும் எனவும் இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.