நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை…

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யும் எனவும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரையோரத்தின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்தில் குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(rizmira)