கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 68 மற்றும் 81 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.