நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மின்சாரத்தை நாளாந்தம் தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதில் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க , அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

நீர் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களுக்கு மழை கிடைத்த போதும் நீர் கொள்ளளவு பாரியளவில் அதிகரிக்கவில்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.