நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களதத்தால் எச்சரிக்கை .

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று(16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குளிப்பதற்காக கடற்கறைகளுக்கு செல்லும் மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.