இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் விஷ்வ பெர்னாண்டோ, இதுவரை ஆறு ஓவர்களை வீசி இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.