நானே மொட்டின் வேட்பாளர் – கோத்தா பிபிசிக்கு கருத்து

(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தான் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிபிசி சேவையுடனான நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்கள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதனாலேயே இரட்டை பிரஜாவுரிமையினை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றில் தனக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கானது ஆதாரமற்றது என்றும், குறித்த வழக்கு அரசியல் நோக்கத்தில் தொடுக்கப்பட்டதாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.