வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் வன்முறைக் குழுவினரை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன், வன்முறைச் சம்பவங்களை புரிவதற்காக ஒன்று கூடும் இடங்களையும், அநாவசியமாக வீதிகளில் நடமாடும் இளைஞர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்து, நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகளை காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.