நான்கு மாவட்டங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 அல்லது 45Km வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே சப்ரகமுவ, மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை பொழிய கூடும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வெலிபன்ன, வெல்லாகல, பெல்லேபெத்த, அகுணகொலபெலஸ்ஸ் மற்றும் மஹியாவ பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.