நான் அவளது தாய் என்று தெரியாது… கீதா முதலைக் கண்ணீர்..?

இரட்டை குடியுரிமை குறித்து தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கினால் தனது மகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“எனது மகள் மிகவும் அப்பாவியானவள். மேகப் கொஞ்சமாவது முகத்திற்கு இடமாட்டாள். எவ்வித மாமிச உணவுகளையோ குறைந்தபட்சம் பால் கூட அருந்த மாட்டாள். எனது மகள் அமெரிக்காவில் பட்டம் பெற்றவள். அவரும் ஊடகத் துறையில் சேவை செய்கிறார். அவர் மிகவும் சாதாரண முறையில் இருக்க விரும்புபவர்.. வாகனம் ஒன்றினை வாங்கிக் கொடுக்க முயன்றாலும் வேண்டாம் என்பாள்.. அவளே சம்பாதித்து வாங்குவாளாம். பேரூந்து மற்றும் புகையிரதங்களில் பயணிக்கிறார். . குறைந்தது அவரது அலுவலகத்தில் கூட தெரியாது அவள் எனது மகள் என்று.. நான் அவளது தாய் என்று. அவ்வாறான ஒருவரை தான் சீண்டினீர்கள்.. வேறொரு அரைநிர்வாண உடலுக்கு எனது மகளின் புகைப்படத்தினை பொருத்தினார்கள்.. இது உண்மையிலேயே அவளுக்கு மன உளைச்சலையும் வேதனையினையும் அளித்துள்ளது.” என தெரிவித்திருந்தார்.

 

 

(rizmira)