நான் இதனை எதிர்பார்க்கவில்லை – சுரங்க லக்மால்…

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தான் எதிர்பார்க்காதவொன்று இடம்பெற்றதாகவும் இலங்கை அணி வீரர் சுரங்க லக்மால் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணிகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் தலைமை சுரங்க லக்மாலுக்கு வழங்கப்பட்டிருந்து. அது பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தினேஷ் சந்திமாலுக்கு மூன்றாவது டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டமையினாலேயே.

இது குறித்து சுரங்க லக்மால் கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. இது டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கி நான் பெற்ற முதல் வெற்றியாகும். மகிழ்ச்சியினை கூற வார்த்தைகள் இல்லை.. நான் அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வழங்கப்பட்ட தலைமையினை சிறப்பாக பயன்படுத்த எண்ணினேன். தலைமைப் பொறுப்பினை ஆர்வத்துடன் பொறுப்பேற்றேன்.. எனது பங்களிப்பு குறித்து மகிழ்கிறேன். அணியில் அனைவரும் ஒருமிக்க பங்களிப்புடன் விளையாடியமையே வெற்றிக்கு காரணம். ”