முதலமைச்சர் ஜெயலலிதா தான் நலமாக உள்ளதாகவும், வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கூறியது போல வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், தற்போது முதலமைச்சர்ர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து பேசுவது போல ஒரு ஓடியோ வெளியாகியுள்ளது.
அதில், நான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன். என் உடல்நலம் கருதி, எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.