“நான் எனது கிரிக்கெட் வாழ்நாளில் இதுவரையில் உபாதைக்கு உள்ளாகியதில்லை – எனது தீர்மானம் தொடர்பில் விரைவில் தெரிவிப்பேன்..” – மாலிங்க..

(FASTNEWS| COLOMBO)- இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“அணியிலேயே நான் மிகவும் வயது சென்ற மூத்த வீரர் என்றே கூற வேண்டும். என்னைபற்றி நிறையவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நான் உடற்தகைமை இல்லை என வாதிட்டனர். என்றாலும் அவற்றினை நான் கண்டுகொள்ளவில்லை. எனது உடற்தகைமை பிட் இல்லாது இருந்தாலும், எனது மனநிலையில் உறுதி இருந்தது. என்னால் முடியும் என நான் எண்ணினேன். என்னால் தொடர்ந்தும் பந்து வீச முடியும் என்ற மன உறுதி என்னில் இருந்தது. கடந்த மாகாண போட்டிகளிலும் தொடர்ச்சியாக 10 மற்றும் 06 ஓவர்கள் பந்து வீசினேன். வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் அர்பணிக்க வேண்டிய மன நிலை என்னிடம் உள்ளது. அவற்றினை நான் செய்து காட்டியுள்ளேன்.

கடந்த 1 1/2 வருட காலமாக நானாக கிரிக்கெட் இலிருந்து ஒதுங்கி இருக்கவில்லை. என்னை ஒதுக்கி வைத்தனர். நான் எனது கிரிக்கெட் வாழ்நாளில் இதுவரையில் மைதானத்திலோ வேறு இடங்களிலோ உபாதைக்கு ஆளாகியதில்லை. ஆனால், என்னை உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் ஊடாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர். நான் பழைய ஞாபகங்களை நினைவூட்ட விரும்பவில்லை.. என்னை ஏன் அணியில் இருந்து விலக்கினார்கள் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது..

எனினும், நான் மீளவும் அணிக்கு திரும்பிய போது என்னால் முடியுமானளவு சாதித்தேன் என்றே கூற வேண்டும்.. எதிர்வரும் போட்டிகளிலும் என்னால் முயன்றளவு முயற்சிப்பேன்.

எனது பந்துவீச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்னை அணியின் தலைமையில் இருந்து விலக்கியுள்ளதாக கூறுகின்றனர். என்றாலும், அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எனக்கு அறிவிக்கவில்லை. அறிவித்ததன் பின்னர் எனது முடிவினை அறிவிப்பேன்.

அண்மைய போட்டிகளில் நான் வனிது ஹசரங்க மற்றும் லஹிறு மதுசங்க ஆகியோரை கவனித்து வந்தேன்.. இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள் என அவர்கள் நிரூபித்திருந்தார்கள். அவர்களை போன்ற இளம் வீரர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் இலங்கை அணியினை வழிநடாத்திச் செல்ல முடியும் என நினைக்கிறேன்…” என தெரிவித்திருந்தார்.