சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவையுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து எனக்கு கிடைத்துள்ள அழைப்பு தொடர்பில் நீங்கள் அனைவரும் என்னிடம் எழுப்பும் கேள்விகளிலிருந்தே நான் இந் நாட்டைவிட்டுச் செல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதனை தெரிந்து கொள்கிறேன்
உங்களுக்கும் இந்த தாய் நாட்டுக்கும் என்னுடைய சேவையின் அவசியம் இருக்கின்ற போது, இந்த நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். அது தொடர்பில் நான் உறுதியளிக்கிறேன்’ என கோட்டாபய ராஜபக்ஷ, மேலும் தெரிவித்துள்ளார்.