(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுவயதில் அனைவருமே அப்பாவிகள் தான் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோத்தபாய ராஜபக்ஸ ராஜபக்ஸ குடும்பத்தில் தாமே மிகவும் அப்பாவியான நபர் என தெரிவித்திருந்தார்.
எல்பிட்டிய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனாக இருந்தாலும் சரி ஹிட்லராக இருந்தாலும் சரி சிறுவயதில் அனைவருமே அப்பாவிகள் தான் பெரியவர்கள் ஆன பிறகுதான் மனிதர்களை கொல்வதாக தெரிவித்துள்ளார்.