“நான் பின்னால் வந்து கத்தியால் குத்துபவன் அல்லன்” – முன்னாள் ஜனாதிபதி

“பிரதமர் வெளிநாடு சென்றுள்ள வேளையில் அரசாங்கத்தை பிடிக்க வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. நான் பின்கதவால் வந்து கத்தியால் குத்துபவன் அல்லன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(03) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைப் பிடிப்பதற்கு பிரதமர் வெளிநாடு செல்லும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அவர் இலங்கையில் இருக்கும் போதே அதனைச் செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் ஒரு வாரம் வெளிநாடு சென்றிருப்பதாகவும், முடியுமானால் அரசாங்கத்தை கவிழ்த்துக் காட்டுமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருந்த சவால் குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.