கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீதிபதி நிஷாந்த பீரிஸினால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் கவர்ஸ் கோபரேட் மற்று என்.ஆர் கன்சல்டேசன் முதலான நிறுவனக்களுக்கு உரித்தான வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தினால் ஹெலோகோப் எனும் பெயரில் உள்ள சங்கமொன்றிற்கு உரித்தான 125மில்லியன் ரூபா பெறுமதியான பங்கினை கொள்வனவு செய்தமையினை, குறித்தே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பினால் பணச்சலவை மோசடி குறித்த சரத்தின் கீழ் முறைப்பாடு அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.