லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உத்தரவைப் புறக்கணித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் நேற்று(14) குற்றப்பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீ பவன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குற்றப்பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த குற்றப்பத்திரத்தை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உத்தரவைப் புறக்கணித்ததன் மூலம் ஆணைக்குழு அதிகாரியின் அதிகாரத்தை அகௌரவப்படுத்தியுள்ளதாகவும் அவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.