நாமலை சேர் என அழைக்காததால் விழுந்த வெட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை மட்டுமே தாம் சேர் என அழைப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நாம் இன்று சேர் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை மட்டுமே அழைக்கின்றோம். வேறு யாரையும் நாம் சேர் என அழைப்பதில்லை.

நான் கடந்த அரசாங்க அமைச்சரவையில் பதவி வகித்த போது ஜனாதிபதியாக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்சவை சேர் என அழைக்க வேண்டும். பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சமால் ராஜபக்ச ஆகியோரையும் சேர் என்ற அழைக்க வேண்டும்.

நான் ஒருபோதும் நாமல் ராஜபக்சவை சேர் என்று அழைத்தது கிடையாது. பசில் ராஜபக்சவையும் சேர் என அழைத்ததில்லை.

இதன் காரணமாகவே எனக்கு தொடர்ச்சியாக வெட்டு விழுந்தது எனக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.