ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது.
நாமல் குமார என்பவரின் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளில் கொலை சூழ்ச்சி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குற்ற விசாரணை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி பிரசன்ன அல்விஸை கொலை செய்வது தொடர்பில் நாமல் குமார மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மேற்கொண்ட கலந்துரையாடல் மாத்திரமே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பிரதி பொலிஸ் மா நாலக சிலவாவின் கல்வி தகுதி தொடர்பில் முறைப்பாடு செய்த அதிகாரிகள் மூன்று பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி அல்விஸ் டி சில்வாவும் உள்ளார்.
நாமல் குமார பொலிஸ் மற்றும் மக்களை பிழையாக திசை திருப்பியுள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை கைது செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.