நாமல் டான்சிங் ஸ்டாராகலாம்

நாமல் ராஜபக்ஷவுக்கு பிரேக் டான்ஸ் ஆட முடியும் என நன்றாக நிரூபித்துள்ளதாக, பெருந் தெருக்கல் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.  இதற்கமைய, ரியாலிடி சோவில் கலந்து கொணடு நாமலுக்கு டான்சிங் ஸ்டாராக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.  “நாமல் பபா” மற்றும் “பஷில் பபா” ஆகியோர் அரசியல்வாதிகளாக வளர்ந்தது சுதந்திரக் கட்சியாலேயே என குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா, அந்த இடத்தில் சிலர் ஒன்று கூடிய விதம் கவலைக் குரியது மற்றும் கோபத்தை வரவைப்பதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.