நாமல் பொய் நாடகமாடுகிறார் – பொலிஸ் ஊடக பேச்சாளர்

தன்னை எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

தனது டுவிட்டர் கணக்கில் இதனை பதிவு செய்த நாமல் ராஜபக்ஷ  இது தொடர்பான அறிவித்தல் கடிதம் நேற்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எனினும் அழைப்பு விடுவிக்கப்பட்ட போதிலும் காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மேலும்  தெரிவித்தார்.

அது அவ்வாறிருக்க, நாமல் ராஜபக்ஷவுக்கு  இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு எவ்வித அழைப்புகளையும் விடுக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் கணக்கு ஊடாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் போலியான தகவல்களை பதிவு செய்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.