முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ’வினது பெயரினை அரச சட்டமா பதிவேட்டிலிருந்து அகற்றுமாறு துஷார ஜயரத்ன எனும் நபரால் தலைமை நீதியரசருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதமானது;
நீதியரசருக்கு,
புதுக்கடை,
கொழும்பு.
லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவினது பெயரினை அரச சட்டத்தரணிகள் பதிவேட்டிலிருந்து அகற்ற தயவான கோரிக்கை
இலங்கை சட்டமா கல்லூரியின் இல 17988 பதிவாகியுள்ள, தேசிய அடையாள அட்டை இல 720692368v ஆகிய தசநாயக முதியன்சலாகே துஷார ஜயரத்ன ஆகிய நான் எழுதிக்கொள்வது;
2010 ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற இறுதிப் பரீட்சையில் லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவுடன் இறுதி பரீட்சைக்காக நானும் தோற்றியிருந்தேன்.
குறித்த பரீட்சையில் லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இலங்கை சட்டக் கல்லூரியின் சாதாரண மாணவனாக இருக்கையில் A/C அறையில் பரீட்சை எழுதியதுடன் குறித்த அறையானது இணைய மயப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயலிழக்கச் செய்த கைத்தொலைபேசியாவது அருகில் வைத்திருக்கத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதனை பரீட்சை மேற்பார்வையாளரிடம் கையளித்தல் வேண்டும்.
மதிப்புக்குரிய நீதியரசரே, இலங்கை சட்டக் கல்லூரியின் 2010 ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள்கள் லக்ஷ்மன் ராஜபக்ஷ அவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது.
குறித்த செயல் குறித்து தான் இலங்கை சட்டக் கல்லூரி அதிபர், நீதி அமைச்சின் செயலாளர், வாழைத்தோட்ட பொலிசார்,மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதம் மூலம் முறைப்பாடொன்றினை முன்வைத்தேன்.
இலங்கை சட்ட கல்லூரியின் அலுவலக முகாமைத்துவராக கடமையாற்றிய கஜநாயக அவர்கள் கல்லூரி தொலைபேசியினூடாகவே தனது கைத்தொலைபேசிக்கு அழைத்து குறித்த முறைப்பாட்டினை திரும்பவும் வாபஸ் பெறுமாறு கூறியதுடன், மரண அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த மிரட்டலினால் இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையின் இறுதிப்பாடத்திற்கு சமூகமளிக்க முடியவில்லை.
மதிப்புக்குரிய நீதியரசருக்கு; 2011 ஜனவரி 11ம் திகதி இதுகுறித்த விசாரணைகளுக்காக நான் 3 முக்கிய சாட்சிகளை முன்வைத்தேன்.
குறித்த சாட்சியங்களாவன;
- லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு இணைய வசதிகளுடன் கூடிய A/C அறை வழங்கப்பட்டிருந்தமை,லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவிற்கு விசேட சலுகைகள் வழங்கி பரீட்சை சட்டரீதிகளை மீறியிருந்தமை.
- பரீட்சைகளுக்கு முன்பதாகவே லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவிற்கு பரீட்சை வினாத்தாள்கள் வழங்கியமை.
- லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக உயர்மட்டத்தில் முறைப்பாடு அளித்ததனை வாபஸ் பெறுமாறு சட்டக் கல்லூரி அலுவலக தொலைபேசியினூடாக மரண அச்சுறுத்தல் விடுத்தமை.
குறித்த விசாரணைகளின் சாதகமான எவ்வித பதிலும் இதுவரை தனக்கு தெரிவிக்கப்படவில்லை. குறித்த முறைப்பாடினால் தான் 2தடவைகள் கடத்தப்பட்டதுடன், தனது வீட்டிலேயே பலாத்காரமாக தனது கையொப்பம் வாங்கப்பட்டதுடன் , ஒருதடவை துப்பாக்கிச் சூட்டிற்கும் ஆளாகினேன்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸ், முன்னாள் நீதியரசர், மனித உரிமை ஆணைக்குழு முதலிய இடங்களுக்கு முறைப்பாடு அளித்தும் எதுவுமே கைகூடவில்லை.
எனக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்து எனது சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஊடாக மனித உரிமை மீறல் மனுவொன்று கையளிக்கப்பட்டதுடன் அது நீதிமன்றினால் புறக்கணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷவிற்காக அந்நேரம் கைகொடுத்து உதவிய ஷிராணி பண்டாரநாயக மூலமாகவே சத்தியபிரமாணம் செய்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் குறித்த நிகழ்வுக்கான புகைப்படங்களும் பெறப்பட்டிருந்த நிலையில் வேறு எந்தவொரு மாணவனும் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த எல்லாவித விசாரணைகளுக்கும் நான் சாட்சியாளராக முன்னிற்க தயாராகவே இருக்கின்றேன்.
இலங்கையில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைக்காக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும், Post- traumatic stress disorder எனும் நோய்க்கு ஆளாகி உள்ளதாகவும், இதுகுறித்த அனைத்து தகவல்களையும் ஆசியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளேன்.
கனம் நீதியரசருக்கு, லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷ அவர்களை உங்களுக்கு கீழ் குழுவொன்றினை நியமித்து ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டு இலங்கை சட்டக் கல்லூரி சட்டப் பதிவேட்டிலிருந்து பெயரினை அகற்றுமாறும் தயவாய் வேண்டிக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
உண்மையுள்ள;
தசநாயக்க முதியன்சலாகே துஷாரா ஜயரத்ன.