(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரான, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது எதிர்கால மனைவியுடன் நடனமாடும் காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.
தற்போது குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவுகின்றது.இந்த காணொளியில் மகிந்தவின் மூன்றாவது புதல்வரான ரோஹித ராஜபக்ச பாடலொன்றை பாடுகிறார்.
லிமினி வீரசிங்கவிற்கும், நாமல் ராஜபக்சவுக்கும் எதிர்வரும் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
லிமினி வீரவங்சவின் தந்தையான திலக் வீரசிங்க செல்வந்த வர்த்தகராவார். இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியிருந்தது.