நாம் அவுஸ்திரேலியாவுடன் இருக்கிறோம் – நாமல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரழிவாக பதிவாகியுள்ள அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிடுகையில்,

அவுஸ்திரேலியாவின் குறித்த எதிர்பாரா அனர்த்தத்தின் போது பலியான மற்றும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தனது கவலையும் தெரிவித்துள்ளார்.

குறித்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 24 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.