நாம் எப்போது இறக்கப் போகின்றோம் – வாங்க அறியலாம்

மனிதனானவனின் பிறப்பு இயற்கையாய் நிகழ்வது போலவே இறப்பும் இயற்கையாகவே நிகழ்கின்றமை நாம் அறிந்ததே.

அதுவும் எப்போது இறக்கப்போகின்றோம் என்பதனை நாம் அறிந்து கொள்ள ஒரு கசப்பான ஆராய்ச்சியில் சுவீடன் விஞ்ஞானிகள் கலமிறங்கியுள்ளார்கள்.

ஆம், 5 வருடங்களில் நாம் இறப்பதை எவ்வாறு துனியலாமென்ற குறித்த விஞ்ஞானிகளின் வலைத்தளக் கேள்விக்கு;

ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பது தெரிந்து விடுமாம்.

அக்கேள்விகளில்,புகை பிடிக்கும் பழக்கம், உடல் நலக்கோளாறு தொடர்பான வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான வயதெல்லை 40 நிரம்பியிருக்க வேண்டும்.

ஸ்கொட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட சுமார் 35,000 நோயாளிகளிடம் இந்த வலைத்தள விஞ்ஞானிகள் முதலில் சோதனை நடத்தினர், அதில் கிடைத்த முடிவுகளில் 80 சதவீதம் வைத்தியர்களின் கணிப்புகளுடன் துல்லியமாக பொருந்தின.

இந்த வலைத்தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு செல்லாமலேயே தங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள அபாயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

ஆனால் இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்றால்போல் இந்த வலைத்தளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.