நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை பொலிசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றஞ்சாட்டியே சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

R.Rishma