“..நாம் மனரீதியாக பாதிக்கப்படவில்லை.. இன்றைய போட்டியில் வெற்றி எமக்கு..” – மாலிங்க..

இலங்கை அணியானது தொடர் தோல்விகளை தழுவி வரும் நிலையில், இது குறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டிக்கான தலைவருமான லசித் மாலிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

“..மனரீதியாக எங்கள் அணிக்கு எந்த அழுத்தமும் இருப்பதாக நினைக்கவில்லை.. தொடரை ஏற்கனவே இலங்கை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காகவாவது போராடும் என எதிர்பார்க்கின்றோம். மேலும், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான் உலக கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் எமது அணி உள்ளது. சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் இம்முறை இளம் வீரர்களுடன் அதிக நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்.

எங்களுக்கு அழுத்தம் மற்றும் டென்ஷன் இருப்பதாக நினைக்கவில்லை. மனரீதியாக இளம் வீரர்களுக்கு பலத்தை அதிகரித்திருக்கிறோம்…” என லசித் மலிங்கா தெரிவித்திருந்தார்.

 

(rizmira)