நாம பாவிக்கும் இந்த மருந்து கல்லீரலை அழிக்கும் என்பது தெரியுமா?

கல்லீரலின் இயக்கம் முற்றிலும் நிற்கும் நிலையைத் தான் கல்லீரல் செயலிழப்பு என்று கூறுவார்கள். கல்லீரல் உடலில் மிகப் பெரிய பணியை செய்வதால், இது செயலிழந்து போனால், மூளையில் இரத்த அழுத்தம் அதிகரித்து, அதனால் இறப்பை கூட சந்திக்க நேரிடும்.

கல்லீரலின் இயக்கத்தை நாம் சாதாரணமாக உட்கொண்டு வரும் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சளி, இருமல் மருந்துகளில் உள்ள அசிட்டமினோஃபென் என்னும் உட்பொருள் பெரிதும் பாதிக்கும்.

அசிட்டமினோஃபென் (Acetaminophen)

Image result for Acetaminophen

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேனில் வெளிவந்த ஒரு ஆய்வில், அசிட்டமினோஃபென் மிகவும் நச்சுமிக்கது மற்றும் இது கல்லீரலை பெரிதும் பாதிக்கக்கூடியது என்றும் வெளிவந்துள்ளது.

எனவே தலை வலி, மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி போன்றவற்றிற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வைத்தியங்களை நாடுங்கள். இதனால் கல்லீரல் செயலிழப்பதைத் தடுக்கலாம்.