சிறுமிகளை நாய்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 32 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரையன் ஜோன் மூர் எனும் 48 வயதான இந்நபர், 2008 முதல் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இந்நபர் இணையத்தளங்கள் மூலம் சிறுமிகளை தொடர்புகொண்டிருந்ததாகவும் அவர்களில் 12 வயதான சிறுமிகளும் அடங்கியிருந்தனர் எனவும் வழக்குத் தொடுநர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இச்சிறுமிகளுடன் இணையத்தளங்கள் ஊடாக உரையாடிய பிரையன் ஜோன், அவர்களை பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டியமை கண்டறியப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெரியன் வால்ட்டர்ஸ், பிரையன் ஜோன் மூருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.