நாரஹேன்பிட்டி ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நேற்று திங்கட்கிழமை(30) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி, 2.5 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விசாரணை செய்யவுள்ளதாகவும், இலஞ்சம் மற்றும் ஊழல்  குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை (30) கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்துள்ளது.