நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் பின்னர் மீண்டும் இந்த நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.