நார்வே, சுவிஸ் நாட்டிலும் காலா படத்துக்கு தடை…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வே, சுவிஸ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி நடித்த காலா படம் வரும் 7 ஆம் திகதி வெளியாகிறது.

இதற்கிடையே காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ‘காலா’ படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியிடும் திகதி நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து ‘காலா’ ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ‘காலா’ படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.