பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலமளிக்கச் சென்றிருந்த போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.