நாளை இறுதித் தினம் – மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 60 சதவீதமான வேட்பாளர்களே இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் நாளைய தினத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள தேர்தல் காரியாலயங்களில் 60 வீதமானவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே இதுவரையில் பெறப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை இம்மாதம் 30 திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு, வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கின்றமையானது, மிகவும் முக்கியமானது என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் நம்புவதாகவும் இதனால் தேர்தல் ஒருமைப்பாடு அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்கள், இன்னும் சில நாட்களில் அதனை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(riz)