நாளை குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் இன்று(03) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராமயவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடலுக்காக மாலை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நாடாளுமன்றத்தில் நாளை(04) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்படவிருப்பதாக தெரிய வருகின்றது.

மேலும் குறித்த கலந்துரையாடலுக்கு ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

 

#####