நாளை மறுதினம் சிம்பாவ்பே போட்டியில் யானைகளது இடையூறு குறித்து அச்சம்..

இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாவ்பே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 06ம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த இந்தப் போட்டியின் பாதுகாப்பிற்காக வனவிலங்கு அதிகாரிகளையும் வரவழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அது, மைதானத்தில் அண்மைக் காலங்களில் யானைகளது நடமாட்டம் உள்ளமையினாலேயே ஆகும்.

மைதானத்தின் முன்வாயில்கள் உள்ளிட்ட சில இடங்களில் யானைகளது தாக்குதல்களால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறுகையில் யானைகள் உள்நுழைவதினை தடுக்க வனவிலங்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)