நாளை முதல் கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடத்த தடை…

க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு நாளை(06) நள்ளிரவு முதல் பரீட்சை பூர்த்தியாகும் வரையில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாதிரி வினாத்தாள் அச்சிடுதல், வினாக்கள் குறித்து கலந்துரையாடல், கருத்தரங்குகள் நடாத்துதல், வகுப்புக்களை நடாத்தல் போன்றவற்றிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.