நாளை(01) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை ஓளரவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கண்டி, மாத்தறை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காற்றின வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரையான ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இந்நிலையில் கடளில் மீன் பிடிக்க செல்வோர் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.