நாளை முதல் பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி நிரல் நடைமுறை…

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும், பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்நடைமுறை, நாளை(08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளது.

மேலும், பத்தரமுல்லயில் இருந்து வரும் வாகனங்களுக்கு பொல்துவ சந்திக்கு அருகாமையில் மாற்று வழியில் பிரவேசிக்க முடியும். இதேபோன்று பாராளுமன்ற வீதி ஊடாக வரும் வாகனங்கள் ஸ்ரீஜயவர்த்தனபுர பிரதான வீதியில் அத்துல்கோட்டே சந்தியின் ஊடாக பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.