நாளை முதல் மின் விநியோகம் சீரடையும் என மின்சாரத்துறை அமைச்சு யூகம்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டானது, நாளை முதல் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்சார நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் தற்போது நாளாந்தம் ஒன்றரை மணி நேர மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படுகிறது.

பாதிப்பு ஏற்பட்டிருந்த மின்பிறப்பாக்கி நாளை முதல் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனூடாக தேசிய மின்னோட்டத்துக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும்.

இந்நிலையில், நாளையில் இருந்து மின்சார விநியோகம் சீராக இடம்பெறும் என்றும் எதிர்பார்ப்பதாக மின்சாரத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.